spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் - வன்னி அரசு

தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் – வன்னி அரசு

-

- Advertisement -

சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6 வது மண்டலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளாா்.தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் - வன்னி அரசுமேலும், இதுகுறித்து தனது வலைததளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”இது தற்காலிக கோரிக்கை தான். ஆனால், இந்த தூய்மை பணியாளர்களில் 90 சதவீதத்தினர் குறிப்பிட்ட தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் தான். அவர்கள் மட்டுமே தொடர்ந்து இந்த பணியில் தொடரவேண்டுமா? என்பது தான் எமது கேள்வி. காலங்காலமாக குறிப்பிட்ட சமூகத்தைச்சார்ந்தவர்களே  இந்த பணியில் அமர்த்தப்படுகிறார்கள் மற்ற சமூகத்தினர் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த சமூகநீதிப்பார்வையில் சொல்லப்பட்ட கருத்து தான். விவசாயத்தொழில் மற்றும் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது போல, தூய்மை பணியிலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை அகற்றப்பட வேண்டும். தூய்மை பணியில் விரும்பி யாரும் வரவில்லை. இது காலங்காலமாக திணிக்கப்பட்ட வன்கொடுமை. இது பணியாக பார்க்கவில்லை. கடவுளுக்கு செய்யக்கூடிய தொண்டாக சனாதனம் திணித்தது. தேவதாசி முறை எப்படி கடவுளுக்கு செய்யக்கூடிய தொண்டாக புகுத்தினார்களோ அதே போலத்தான் தூய்மை பணியும். இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் எழுதிய “கர்மா_யோகி” நூலில் துப்புரவு பணி செய்வது கடவுளுக்கு செய்யக்கூடிய தொண்டு என பெருமைப்பட்டுள்ளார். இந்திய சனாதிபதி திரவுபதி முர்மு அவர்களும் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டவுடனே கோவில் ஒன்றில் தூய்மை பணியில் ஈடுபட்டதை பெருமையாக வீடியோவாக பகிர்ந்தார்.

we-r-hiring

இந்த கர்மாவைத்தான் விடுதலைச்சிறுத்தைகள் எதிர்க்கிறோம். மனிதக்கழிவை மனிதனே அள்ளும் கர்மா மாற்றப்பட வேண்டும். தலித்துகள் மட்டுமல்ல; எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் இந்த தூய்மை பணியில் எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்பதே விடுதலைச்சிறுத்தைகளின் தொலைநோக்கு பார்வை. இது தான் இடதுசாரி பார்வை எமது தலைவர் திருமாளவளவனின் இந்த சமூகநீதிப்பார்வை இந்தியா முழுக்க விரைவில் எதிரொலிக்கும். அதற்கான முன்னெடுப்பை விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளாா்.

டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…

MUST READ