Homeசெய்திகள்தமிழ்நாடுதடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை - முதலமைச்சர் வழங்கினார்

தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப்பொருட்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் முக்கியப் பணியாகும். இவர்கள் தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் மற்றும் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

முன்னதாக 26.7.2021 அன்று மேற்கண்ட பதவியில் 62 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு தடய அறிவியல் துறையில் பணிகள் எவ்வித தொய்வுமின்றி நடைபெற செய்யப்பட்டது. வழிவகை மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தடய அறிவியல் துறையின் செயல்திறனை உயர்த்தும் வகையில், 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக மேம்படுத்தப்பட்ட டிஎன்ஏ (DNA Unit) பிரிவுகள், கணினி தடய அறிவியல் (Computer Forensic Unit) பிரிவுகள், நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் (Mobile Forensic Lab) அமைக்கப்பட்டதுடன், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் அலகுகள் ISO/IEC 17025, 2017 தரச் சான்றினை பெற்றுள்ளது. மேலும், சிறார்களிடம் பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளின் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக போக்சோ சட்டத்தின் கீழான குற்ற நிகழ்வுகளில் தடய அறிவியல் துறை அறிக்கைகளை விரைந்து வழங்கிட, போக்சோ கணினி தடய அறிவியல் பிரிவு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ