Homeசெய்திகள்தமிழ்நாடு’கள ஆய்வில் முதல்வர்’ - ஏப்ரல் 25,26ல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் முதல்வர் ஆய்வு..

’கள ஆய்வில் முதல்வர்’ – ஏப்ரல் 25,26ல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் முதல்வர் ஆய்வு..

-

‘கள ஆய்வில் முதல்வர்’திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ‘கள ஆய்வில் முதல்வர்’ என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் முதற்கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மூன்றாவது கட்டமாக மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி ஆகிய 5 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனைத்தொடர்ந்த் தற்போது ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் வருகின்ற 25 மற்றும் 26-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 25-ம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற மாவட்ட அலுவலர்களுடன் இரண்டு நாள் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. .

பின்னர் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண்மை, அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள், கிராமப்புறங்களின் வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, சமூக நலன், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறன் உள்ளிட்டவைகள் குறித்தும் ஒரே நேரத்தில் கள ஆய்வுகள் செய்ய உள்ளார். மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ