Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தப் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மாற்றும் விவகாரத்தில் கடிதம் மூலம் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?

அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மே 31- ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி குறிப்பிட்டுள்ளார். மறுநாளே இந்த கடிதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது, செந்தில் பாலாஜியிடம் உள்ள துறைகளை மாற்றி அமைக்கக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு அவர் ஒப்புதல் அளித்திருந்த வேண்டும் எனவும் அமைச்சர் முனைவர் க.பொன்முடி கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் அவரிடம் இருந்த துறைகளை மாற்றக் கோரப்பட்டது. அதன்படி, மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை முத்துசாமிக்கும் மாற்ற முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி

இந்த நிலையில், முதலமைச்சர் உடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முனைவர் க.பொன்முடி, “துறைகளை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை, முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தோம். அரசியலமைப்புச் சட்டங்களைத் தெரிந்த ஆளுநராக இருந்திருந்தால் உடனே ஒப்புதல் அளித்திருப்பார்.

முதலமைச்சர் எழுதிய கடிதம் திசைத் திருப்பும் வகையில், தவறாக இருந்ததாக ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க. உறுப்பினர் போல் செயல்படுகிறார்.தற்போதைய மத்திய அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த போது, வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில், எப்படி பதவியில் தொடர்ந்தார்? என்பதையும் உதாரணமாகச் சுட்டிக்காட்டினோம். வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே, அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ