Homeசெய்திகள்தமிழ்நாடு"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

"1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?"- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
Video Crop Image

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3 ஆண்டுகளாக 3,500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும், தி.மு.க. மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன.

சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கிடைப்பதில் மகிழ்ச்சி – உதயநிதி!

அந்த போதைப்பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல், அவனுக்கு தி.மு.க.வில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அவரது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டு பின்பு டெலிட் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரிய வருவதாலும், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாலும், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ