Homeசெய்திகள்தமிழ்நாடுராதாபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ராதாபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

-

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ராதாபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டபள்ளி அருகில் நேற்று (22.05.2024) அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைகத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த திருமதி. சந்தனகுமாரி (வயது 42) க/பெ.விஜயகுமார் மற்றும் திருமதி. முத்துச்செல்வி (வயது 30) த/பெ.முருகேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

முதலமைச்சர் இரங்கல்

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ