spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்

கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்

-

- Advertisement -

கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்

சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 18 மாணவிகள் காயமடைந்தனர்.

Image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டுவில்யில் உள்ள தனியார் புனித பவுல் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளானது. இன்று காலை தேவகோட்டையில் இருந்து கீழடி அருங்காட்சியகம் காண்பதற்காக 18 மாணவிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து காளையார் கோவில் – சிவகங்கை சாலையில் நாட்டரசன்கோட்டை என்ற இடத்தில் வளைவில் திரும்பும் விபத்துக்குள்ளானது.

we-r-hiring

கீழடி செல்லும் பாதையை டிரைவர் சுப்பிரமணி (67) கூகுள் மேப்பில் பார்த்தபொழுது நிலை தடுமாறி, வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக பெரிய காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக கல்லூரி மாணவிகள் உயிர்தப்பினர். அவர்களை 108 மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

MUST READ