வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, ஏப்ரல் முதல் நாளான இன்று சமையல் கேஸ் சிலிண்டர் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு விலை ரூ. 76 குறைந்துள்ளது. இன்று முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.76 ரூபாய் விலை குறைப்புக்கு பின், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2,192 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.