Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு - நடிகர் கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு – நடிகர் கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்!

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடமிருந்த்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கருணாஸ் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சற்று முன் வந்துள்ளார். இதில் அவருடைய உடமைகளை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டுள்ளனர். இதில் அவருடைய பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது. குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து குண்டுகளை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், கருணாஸை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

MUST READ