Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!

அனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!

-

- Advertisement -

தவெகவுடனான புதிய அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் எடுக்கப்படாமல், அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் கொண்டதாக தோன்றுவதாக கூறி காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அலிம் அல்புஹாரி அறிவித்துள்ளாா்.அனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக – காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த காரணத்தால், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராக இருந்த அலிம் அல்புஹாரி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விஜயை அவரது பனையூர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

we-r-hiring

மேலும், புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும், அடுத்த உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த அரசியல் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிருப்தி கிளம்பியது. சில நிர்வாகிகள், தவெகவுடன் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாத அரசியல் என குற்றம்சாட்டி தங்களது பதவிகளில் இருந்து விலகினர். தேசிய மாணவர் யூனியன் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் AIPC நிர்வாகி பிரனேஷ் பாலாஜி உள்ளிட்டோர் தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புஹாரி, தனது சமூக வலைதள பதிவுகள் மற்றும் ஊடக பேட்டிகள் மூலம் தவெக – காங்கிரஸ் கூட்டணியை வெளிப்படையாக விமர்சித்தார். “கொள்கைப் பிடிப்பே அரசியல்; சந்தர்ப்பவாதம் அல்ல” என்று அவர் பதிவிட்டதுடன், இதே போன்று பாஜக மற்றும் அதிமுக செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஒரு யூடியூப் பேட்டியில், “தீய சக்தி என்று விமர்சித்த கட்சியுடன் தேர்தலில் கூட்டணி அமைத்து, பின்னர் அதே விஜய்யுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த கருத்துகள் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகமது ஷாகித் வெளியிட்ட அறிவிப்பின் மூலம், அலிம் அல்புஹாரி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதித்தே தீரும்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை…

MUST READ