spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

-

- Advertisement -

செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தெரிவிக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chennai High Court ordered to ADMK Nirmal Kumar to remove all derogatory post on Minister Senthil Balaji

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களை பரப்புவதாக தமிழக பாஜக முன்னாள் ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் (தற்போது அதிமுகவில் இணைந்து விட்டார்)மீது குற்றம்சாட்டி, அதுபோல பேச தடை விதிக்கக்கோரி மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

we-r-hiring

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நிர்மல்குமார் தாக்கல் செய்த பதில்மனுவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிட்டார். செந்தில்பாலாஜி வழக்கு குறித்து டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கின் முழு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

 

MUST READ