spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
Video Crop Image

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

we-r-hiring

“பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்துக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி, ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனேஷ்கர் பட்டாசு ஆலையில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருட்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதால் 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே, சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இதேபோல் மற்றொரு வெடி விபத்து நிகழ்ந்தது. இதில், சிக்கி ஒரு தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஒரே நாளில் இரண்டு பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து, வெடி விபத்து ஏற்பட்டது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

இதனையடுத்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

MUST READ