spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்துக"- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்துக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

ttv dhinakaran

we-r-hiring

பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது கடைசி விவசாயி!

இது தொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் இதுவரை 30- க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்வதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ