spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்"- தமிழக அரசு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்”- தமிழக அரசு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!
Photo: EPS Twitter Page

தமிழகத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ- சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும், விடியா தி.மு.க. அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர்.

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை!

இந்நிலையில், பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, உடனடியாக விடியா அரசின் முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ