சி ஆர் பி எப் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் சி. ஆர். பி. எப் ஆட்சேர்க்கான கணினி தேர்வை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
சி ஆர் பி எப் ஆட்சேர்க்கை காண தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு நடத்தப்படப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது என்றார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். 9212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன தமிழ்நாட்டில் 12 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தாய் மொழியில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும், 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.
சி ஆர் பி எப் தேர்வு அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போர் நலனுக்கு முற்றிலும் எதிராக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் வாய்ப்பை பறிப்பதாக அறிவிக்கை அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்வு என்ற அறிவிப்பு அரசாணைப்பு சட்டம் தந்துள்ள சம வாய்ப்பை மறுப்பதாக உள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.