Homeசெய்திகள்தமிழ்நாடுகாவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்

காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்

-

- Advertisement -

காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்சாத்தான்குளம் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் வரலாற்று சிறப்பு மிகக் தீர்ப்பை வழங்கியுள்ளாா். ”ஆயுள் தண்டனை அச்சம் தராது” எனக் குறிப்பிட்ட நீதிபதி, இனி இது போன்ற  சம்பவங்கள் நடக்கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக கூறியுள்ளாா்.

மேலும், சட்ட திட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிடாவிடால் தந்தை மகன் உடலுடன் உண்மையும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று கூறினாா்.

we-r-hiring

இந்த வழக்கில் காவல்நிலையத்தில் தந்தை, மகன் இருவரும் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வேலியே பயிரை மேய்ந்தது போல், போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்த 2 வியாபாரிகள் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் காவல் நிலையத்தில் இனி இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடக்காதவண்ணம் தண்டனை அளித்தால் மட்டுமே இதுப் போன்ற குற்றங்கள் தொடராது என்று நீதிபதி எச்சரித்துள்ளாா்.

குற்றவாளிகளுக்கு ஆயுன் தண்டனை போதுமானதாக இருக்காது. யார் அதிகமாக அடித்தார்கள் என்ற வேறுபாடு காட்ட இயலாது, ஆகவே உச்சபட்ச தண்டனையே சிறந்தது. குற்றசாளிகளுக்கும் குடும்பம் உள்ளது என்பாதால் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதல்ல.

ஆயுன் தண்டனை வழங்கினால் காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என்றும் நீதிபதி முத்துக்குமரன் குறிப்பிட்டாா். மேலும், இந்த வழக்கு இந்தியாவையே உலுக்கிய காவல் மரண வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளாா்.

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

MUST READ