பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் மனு அளிப்போம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.
போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது என்றும், துறையில் உள்ள பல்வேறு சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசு உடனடியாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் என்றும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க விட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: போக்குவரத்து தனியார்மயமாக்கல் பணிகள் நடக்கின்றன. தீபாவளியின்போது தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இது தேவையே இல்லை. கி.மீ. க்கு 51 ரூபாய் தரப்பட்டுள்ளன .கி.மீ.,க்கு 30 ரூபாய் வருவாய். கொடுப்பதோ 51 ரூபாய். பல கோடி ரூபாய் தனியாருக்கு போகிறது. போதுமான சிறப்பு பேருந்துகள் இருக்கும்போது, தனியார் பேருந்துகளை பயன்படுத்துவது ஏன்?
தொழிலாளர்களின் பணம் 15 ஆயிரம் கோடியை எடுத்து செலவு செய்கின்றனர். 25000 இடங்கள் காலியாக உள்ளன. 23000 பேருந்துகள் ஓடிய நிலையில், இப்போது 18000 பேருந்துகளே ஓடுகின்றன. இந்த துறையை வலுப்படுத்த வேண்டும். கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசிடம் வழங்க உள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். 3 வது வாரத்தில் இருந்து போராட்டம் துவங்கும். எடுத்த உடனேயே வேலை நிறுத்தம் இருக்காது. படிப்படியாகத்தான் நடைபெறும். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை துவக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
அரசு காலதாமதம் செய்வதன் காரணமாகவே பண்டிகை நேரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. நாங்களாகவே திட்டமிட்டு தீபாவளி, பொங்கல் நேரத்தில் வேலை நிறுத்தம் செய்யவில்லை என்றார்.