Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலுக்காக தந்தையை கொலை செய்ய துணிந்த மகள்:காதலனுடன் கைது :

காதலுக்காக தந்தையை கொலை செய்ய துணிந்த மகள்:காதலனுடன் கைது :

-

காதல் விவகாரம் கண்டித்த பெற்றோர்: காதலன் உதவியுடன் தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகள் ,காதலன் ,என நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேனுகோபால் பாண்டியன். பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் இவருக்கு  உமாமகேஸ்வரி என்ற மனைவியும் 16 வயது மகளும் உள்ளனர் ( ரோஷிதா). இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த  போது ,காதல் விவகாரம் தொடர்பாக தந்தை வேணுகோபால் பாண்டியன் சிறுமியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக சிறுமியின் பாட்டி பாண்டியம்மாள் சிறுமியை அழைத்துக்கொண்டு சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒரு மாதமும் பெரியகுளத்தில் ஒரு மாதமும் தங்கியுள்ளார். இதில் சிறுமி பெரியகுளத்தில் தங்கியிருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த முத்துக்காமாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தது மட்டுமல்லாமல் வெளியூர் சென்றும் சுற்றிவந்துள்ளனர். இது சிறுமியின் தந்தைக்கு தெரியவர முத்துக்காமாட்சியை எச்சரித்துள்ளார்.

மேலும் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து வேறு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்த்து படிக்க வைத்துள்ளார். அதன் பின்னரும் பெற்றோருக்கு தெரியாமல் சிறுமி தொலைபேசியில் தனது காதலன் முத்துக்காமாட்சியிடம் பேசி வந்துள்ளார். செல்போனில் காதல் தொடர்வதை அறிந்த தந்தை  வேணுகோபால் பாண்டியன் சிறுமியை மீண்டும் கண்டித்துஉள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்காமாட்சி சிறுமியின் சம்மதத்துடன் அவரது தந்தை வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய முடிவு செய்து  பழனிச்செட்டிபட்டிக்கு தனது நண்பர்களான செல்வகுமார் (23) கண்ணப்பன் (23) ஆகியோருடன் வந்த முத்துக்காமாட்சி சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் ,தந்தை வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது ,அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருந்த அரிவாளால் வேணுகோபால் பாண்டியனை தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட வேணுகோபால் பாண்டியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

காதலுக்காக தந்தையை கொலை செய்ய துணிந்த மகள்:இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் உமாமகேஸ்வரி பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி , அவரது காதலன் முத்துக்காமாட்சி மற்றும் அவரது நண்பர்களான செல்வகுமார், கண்ணப்பன் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நாலவரையும் சிறையில் அடைத்தனர்.

காதல் விவகாரத்தை கண்டித்த தந்தையை காதலன் உதவியுடன் கொலை செய்ய முயன்ற மகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ