Homeசெய்திகள்தமிழ்நாடுதோனி மீது அவதூறு பரப்பிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தோனி மீது அவதூறு பரப்பிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

-

 

"ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை"- கேப்டன் தோனி பேட்டி!
Video Crop Image

100 கோடி ரூபாய் மானநஷ்டக் கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனி தரப்பு கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்கும் படி, ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஜீ மீடியா தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இதில் ஜீ மீடியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழ்பெற்ற வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்து செய்தி வெளியீடும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தோனி ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!

இதையடுத்து, ஜீ மீடியாவின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், தோனி தரப்பின் கேள்விகளுக்கு 10 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

MUST READ