spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம்…

“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம்…

-

- Advertisement -

“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக இன்று முதல் சென்னை நகரில் முதல் கட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள்  விநியோகம்… “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வருகிற 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் 1 லட்சம் தன்னாா்வலா்கள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது. முழுமையாக ஜூலை 15-ம் தேதி தொடங்க உள்ள இந்த திட்டமானது அக்டோபர் 31-ஆம் தேதி வரை தொடரும். முதல் முறையாக வருகின்ற 15 ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடக்கி வைக்க உள்ளாா்.“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள்  விநியோகம்…விண்ணப்பங்கள் முகாம்களில் மட்டுமே பெற முடியும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு சேவைகள் ஒரே இடத்தில் நடைபெற உள்ளன. சென்னையில் முதற்கட்டமாக 6 வாா்டுகளில் இன்று விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடைக் கோடி மக்களுக்கும் தமிழக அரசின் திட்டங்களை கொண்டு செல்வதே “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் நோக்கமாகும்.“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள்  விநியோகம்…மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 43 திட்டங்களுக்கான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் விதமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நகர்புற பகுதிகளில் நடைபெற உள்ள 3,768 முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஊரகப் பகுதிகளில் நடைபெற உள்ள 6,232 முகாம்களில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளா்!

MUST READ