spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN GOVT

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!

அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் இ.ஆ.ப., நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆட்சியராக இருந்த ராகுல்நாத் இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்ஸி ரம்யா இ.ஆ.ப., நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண் தம்புராஜ் இ.ஆ.ப., கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஷா அஜித் இ.ஆ.ப., சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிறிஸ்துதாஸ் இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் கங்காரா இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கோடி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சரயு இ.ஆ.ப. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ