Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி விடுமுறை எதிரொலி... சென்னையில் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

தீபாவளி விடுமுறை எதிரொலி… சென்னையில் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

-

- Advertisement -
kadalkanni

தீபாவளி பண்டிகை விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பெருநகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல், வடமாநிலங்களில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

சென்னை – தூத்துக்குடி இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.4,109 ஆக உள்ள நிலையில், இன்று விமான கட்டணம் ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.4,300ஆக உள்ள நிலையில் இன்று ரூ.11,749 முதல் ரூ. 17,745 வரை உயர்ந்துள்ளது.

இதேபோல், சென்னை- திருச்சி இடையே சாதாரண நாட்களில் ரூ.2,382 ஆக உள்ள டிக்கெட் கட்டணம் இன்று ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை உயர்ந்துள்ளது. சென்னை- கோவை இடையே சாதாரண நாட்களில் ரூ.3,474 ஆக உள்ள விமான கட்டணம் இன்று ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை உயர்ந்துள்ளது. சென்னை- சேலம் இடையே சாதாரண நாட்களில் ரூ.3,300 விமான கட்டணம் இன்று ரூ.8,353 முதல், ரூ.10,867 வரை உயர்ந்துள்ளது.

சென்னை விமான நிலையம்

இதேபோல், சென்னை- டெல்லி இடையே சாதாரண நாட்களில் ரூ.5,475 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை உயர்ந்துள்ளது. சென்னை-கொல்கத்தா இடையே சாதாரண நாட்களில் ரூ.4,599 ஆக உள்ள விமான கட்டணம் இன்று ரூ.11,296 முதல் ரூ.13,150 வரை உயர்ந்துள்ளது. சென்னை- ஹைதராபாத் இடையே சாதாரண நாட்களில்  ரூ.2,813 ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.3,535 முதல் ரூ.7,974 வரை உயர்ந்துள்ளது

மேலும், சென்னை- அந்தமான் இடையே சாதாரண நாட்களில் ரூ.5,479 ஆக இருந்த விமான கட்டணம் இன்று அதிரடியாக உயர்ந்து ரூ.9,897 முதல் ரூ.10,753 வரை விற்பனையாகிறது. சென்னை – திருவனந்தபுரம் இடையே சாதாரண நாட்களில்  ரூ.3,477ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.6,185 முதல் ரூ.18,501 வரை அதிகரித்துள்ளது. இதேபோல், சென்னை – கொச்சி இடையே ரூ.2,592 ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.4,625 முதல் ரூ.6,510 வரை உயர்ந்துள்ளது.

MUST READ