spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி ரயில் முன்பதிவு! 10 நிமிடத்திலே டிக்கெட்டுகள் புக்…

தீபாவளி ரயில் முன்பதிவு! 10 நிமிடத்திலே டிக்கெட்டுகள் புக்…

-

- Advertisement -

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்பனையானது. டிக்கெட் முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.தீபாவளி ரயில் முன்பதிவு! 10 நிமிடத்திலே டிக்கெட்டுகள் புக்…வருகிற அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் 60 நாட்களுக்கு முன்பாகவே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் திங்கட்கிழமை தீபாவளி என்பதால் அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமையே ஊருக்கு செல்ல டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். காலை 8 மணி முதல் துவங்கிய முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நேரடியாக ரயில்வே முன்பதிவு மையங்களுக்கு வந்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் அக்டோபர் 18ஆம் தேதி டிக்கெட்டுகள் புக் செய்வதற்கு நாளை மீண்டும் வரவேண்டும் என தெரிவித்துச் செல்கின்றனர்.

பேருந்துகளில் இரு மடங்கு கட்டணம் இருக்கிற காரணத்தினால் ரயிலில் முன்பதிவு செய்ய முயன்றாலும் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கூடுதல் ரயில்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தேவையான வசதிகள் கூடுதலாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாளை அக்டோபர் 18 ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு என்பது காலை 8 மணியிலிருந்து துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

150 பயணிகளுடன் நடு வானில் பறந்த விமானம்… சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு…

we-r-hiring

MUST READ