Homeசெய்திகள்தமிழ்நாடு"நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது"- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

“நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

-

 

"நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது"- ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
Video Crop Image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நீதிமன்றம் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்க்கொள்வோம். பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்

அமைச்சர் பொன்முடி வழக்கில் பல ஆண்டுகளாக வழக்கு நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை போலவே தி.மு.க. அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையில் தவறான நோக்கம் இருக்கக் கூடாது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீது மட்டும் தாமாக முன் வந்து உயர்நீதிமன்றம் விசாரிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…

அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளை தாமாக முன் வந்து கையிலெடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு விசாரணையின் போது, வழக்கின் தீர்ப்பைப் படித்து மூன்று நாட்களாகத் தூங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ