மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவின் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரை நிலையூரில் உள்ள கைத்திறி நகரில் நடைபெற்றது.
நிலையூரில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை அதிமுக பகுதி கழக செயலாளர் வக்கீல் ரமேஷ் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்தியன் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜா செல்லப்பா ஊராட்சி கழகம் மற்றும் கிளை செயலாளர்களுக்கு கியூ.ஆர் கோடு கொண்ட அதிமுக அடையாள அட்டையை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பொது மக்களிடம் உரையாற்றினார் அப்போது அவர் குறிப்பிடுகையில்
அதிமுகவின் அடையாள அட்டை இரண்டு கோடி தொண்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. பாஜக திமுகவுடன் உறவு வைத்திருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. திமுக எதற்கு பாஜகவுடன் கூட்டணி சேர முயற்சிக்கிறது இந்தியா கூட்டணியை உருவாக்கியதே நான் தான் என்று ஸ்டாலின் சொன்னாரே இன்று இந்தியா கூட்டணி அனாதையாக விட்டுட்டு கிளம்பிவிட்டார் ஸ்டாலின். எதற்கு மக்களை காக்க வா மக்களுக்கு நலத்திட்டங்கள் கொடுக்கவா? தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள.
இன்னமும் கனிமொழி, ஆ.ராசா மீதும் உள்ள இன்னும் வழக்குகள் முடிக்கப்படவில்லை. அலை கற்று ஊழல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தயாநிதி மாறன் தனது அண்ணா சாலையில் உள்ள டிவி அலுவலகத்திற்கு பாதாள சாக்கடை மூலம் வயரை கொண்டு போய் டெலிபோன் செலவை மிச்சம் செய்தாரை அந்த வழக்கை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, இன்னும் முடியவில்லை.
மத்திய அரசிடம் திமுக மாட்டியிருப்பது மட்டுமல்ல, மத்திய அரசிடம் இருந்து நிதி வராத காரணத்தினால் தமிழகத்திற்கு எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியவில்லை. எடப்பாடி தொடங்கி வைத்த பெரிய திட்டங்கள் போன்று ஸ்டாலின் இதுவரை எந்த ஒரு திட்டமும் தொடங்கவில்லை.
திமுக வந்த பிறகு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தவிர ஸ்டாலின் எதையும் பிறக்கவில்லை அந்த நூற்றாண்டு நூலகத்தில் கூட தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது.
மூன்று முறை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று நகர்ப்புற அமைச்சர் நேருவிடம் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறேன். அமைச்சர் நேரு இதற்காக 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மூன்று வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் பேசியதை ஆடியோ மற்றும் வீடியோவுடன் வைத்திருக்கிறேன் அதை அனைவருக்கும் போட்டு தான் காட்ட வேண்டும். ஒருமுறை கூட எந்த ஒரு திட்டத்தையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
திமுக செய்த தவறு புரிந்து விட்டது திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அமைச்சர் துரைமுருகன் பாஜக குறித்து எவ்வளவு பேசி இருப்பார் ஆனால் நேற்று அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்குக்கு சால்வை போடுகிறார். உடனடியாக மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூப்பிட்டு இந்த சால்வையை பாருங்கள் என்று காண்பிக்கிறார். ஏனென்றால் அது ஒரு மஞ்சள் நிற சால்வை நேற்று வரை ஒன்றிய அரசு என்று சொன்னார்கள் திராவிட மாடல் என்று சொன்னார்களே ஆனால் இப்போது ஒரே நாளில் எல்லாம் மாறிவிட்டது என்று ராஜ்நாத் சிங் நினைத்துக் கொண்டார். திராவிட மாடலும் போச்சு ஒன்றிய அரசும் போச்சு நேற்றிலிருந்து மத்திய அரசு என்று ஆரம்பித்து விட்டார்கள்.
விமானத்தில் வரும்போது செல்வப் பெருந்தகை மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை சந்தித்து பேசியபோது திமுக மீது இருக்கும் அதிருப்தியை தான் தெரிவித்தார்கள்.
நாணயம் வெளியிட்ட போது ஏதாவது ஒரு கூட்டணி கட்சியை கூப்பிட்டு இருக்க வேண்டும் ஆனால் எந்த கூட்டணி கட்சியை கூப்பிட்டீர்கள். அண்ணாமலை போய் தங்கி தயங்கி நிற்கிறார் வேறு வழியே இல்லை. மீண்டும் மந்திரி பதவி வேண்டும் என்பதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறார்கள். நான்காண்டு கழித்து இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று ராகுல் காந்தியை தூக்கி எறிந்து விட்டார்கள்.நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டார் இளைஞர்கள் எல்லாம் அவரது ரசிகர்கள் போனாலும் போய் விடுவார்கள் அவர்களை தடுப்பது எப்படி என்று கூட்டணி சேர்ந்து இருக்கிறது.