- Advertisement -
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணைச் செயலராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வரின் இணைச் செயலராக புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பினை புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் இன்று காலை நியமிக்கப்பட்டவுடன் பணி நியமனம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தலைமைச் செயலகம் வந்த அவர் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தநிலையில் முதல்வரின் இணைச் செயலர் நியமனம் , தூக்துக்குடி ஆட்சியர் மாற்றம் குறித்து அறிவிப்பை நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.