Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. தொண்டர்கள் புலம்பும் பொங்கல்

தி.மு.க. தொண்டர்கள் புலம்பும் பொங்கல்

-

- Advertisement -

பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கல் பண்டிகைக்கு தேவையான புதிய உடைகள் வாங்குவதில் தொடங்கி நீண்டநாள் பார்க்க முடியாமல் இருந்த உற்றார், உறவினர்களை பார்க்கவும், அவர்களுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடுவதற்கு ஆர்வமுடன் திட்டமிடுவார்கள். பொதுவாக பொங்கல் என்றால் தமிழர்கள் மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

ஆனால் இந்த பொங்கல் தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கவில்லை. தி.மு.கவின் கடைசி தொண்டன் கலையிழந்து காணப்படுகிறான். ஆட்சியில் இருக்கும் கட்சியின் தொண்டனின் முகம் மகிழ்ச்சியின் மலர்ச்சியில் பூத்து குளுங்க வேண்டிய முகம், வத்தி வாடிபோய் இருக்கிறது. ஏன் இந்த வாட்டம்? எதற்காக இந்த சோர்வு?  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டால் சோர்வடைந்துள்ளான? முதலமைச்சரின் செயல்பாட்டை பார்த்து உலகமே வியந்து பாராட்டுகிறது.

we-r-hiring

தமிழகம் என்று உச்சரித்த ஆளுநர் ரவியை தமிழ்நாடு என்று உச்சரிக்க வைத்தவர் நமது முதலமைச்சர். மாநில அரசின் வேலைவாய்ப்பில் தமிழ் படித்தவர்கள் மட்டும் தான் என்று சட்டம் இயற்றி வெளிமாநிலதவர்களுக்கு தடைபோட்டவர் முதலமைச்சர். அதனால் தி.மு.க. தொண்டனுக்கு ஒருவித மகிழ்ச்சிதான். பின்னர் என்ன சோர்வு?

கடந்த பத்து ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டம், பொது கூட்டம், மாநாடு என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தவன், அதனால் கையில் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ, கடன் வாங்கியாவது கட்சி கட்டளையை நிறைவேற்றியவன்.  இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகிறது. அவனுக்கு இந்த ஆட்சி கொடுத்தது என்ன? அவன் அடைந்த பயன் என்ன? கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலாவது அரசு அலுவலகங்களில் ஒரு காரியத்தை சாதித்து கொண்ட தி.மு.க. தொண்டன், அவன் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயலை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவரிடம் பேசும்போது, எங்கள் தலைவர் ஆட்சியை, நிர்வாகத்தை நன்றாக நடத்துகிறார். ஆனால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர்ள், மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர் போல் செயல்படுகிறார்கள் என்றார். தி.மு.க.தலைவர் ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களை மேயராக்கி ஆட்சிக்கு அழகு சேர்த்தார். ஆனால் அமைச்சர்கள் அவர்களுக்கு ஏற்ற அதிகம் படிக்காத, விபரம் இல்லாத நபர்களுக்கு கவுன்சிலர் சீட் கொடுத்து வெற்றி பெற வைத்து மேயராக்கி கொண்டார்கள்.

சென்னை, தாம்பரம், ஆவடி மேயர்கள் அமைச்சர்கள் உட்கார் என்றால் உட்காருகிறார்கள், எழுந்திரு என்றால் எழுந்திருக்கிறார்கள். அமைச்சர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். அவர்களுக்கு மேயர் பதவி என்றால் என்ன? அந்த பதவிக்கு உள்ள அதிகாரம் என்ன? என்று எதுவும் தெரியாது. சென்னை மேயர் பிரியா காரில் தொங்கிக் கொண்டு போனது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு மேயர் என்பவர் யார் என்று தெரிந்திருந்தால் அப்படி காரில் தொங்கி கொண்டு போய் இருக்க மாட்டார் என்று புலம்பி தீர்த்தார்.

அதேபோல் திமுக மாநகர பொருப்பாளர் ஒருவரிடம் பேசும்போது, கவுன்சிலர் தேர்தலில் நின்றவர்களில் பெரும்பாலனவர்கள் சாதாரண நிலையில் உள்ளவர்கள்தான். ஒவ்வொருவரும் சுமார் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துதான் வெற்றி பெற்றோம். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. கடன்காரனாக ஆனதுதான் நடந்தது. இப்போது இருக்கும் மேயரே ஒரு வீடு கட்டுவதற்கு அப்ரூவல் வாங்க முடியாத நிலை இருக்கிறது.

கவுன்சிலரால் என்ன செய்ய முடியும் என்று கொட்டி தீர்த்தார். மேலும் அரசு நடத்தும் மதுகடையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. கடந்த ஆட்சியில் பார் நடத்தியவர்கள் தான் தற்போதும் நடத்துகிறார்கள். வட்டச் செயலாளர், கவுன்சிலர் என்று எல்லோரும் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பண்டிகை காலத்தில் கட்சியின் தொண்டர்களை அழைத்து கரும்பு, அரிசி, பொங்கல் பானை மற்றும் புத்தாடை வழங்கினார்கள். திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சிக்காக உழைத்தவர்கள் யார்?  காசுப் பணத்தை இழந்தவர்கள் யார் என்பதை மறந்து விட்டதுதான் வேதனை அளிக்கிறது

MUST READ