
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) மதியம் 01.00 மணிக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பாராட்டு கடிதத்தை வழங்கிய வாழ்த்திய முதலமைச்சர்!
அப்போது பேசிய வில்சன் எம்.பி., “ஆளுநரின் முடிவு நிராகரிக்கப்பட வேண்டியது; அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அமைச்சரை நீக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் குறிப்பிட்ட அரசியல் சாசன பிரிவுகளின் படியே, அவருக்கு அதிகாரமில்லை என்பது தெளிவாகிறது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை மட்டுமே நடந்து வருவதால் அவரை நீக்கத் தேவையில்லை. அமைச்சரை நீக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்றார்.
“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
அதைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் விசாரணையில் பாதிப்பு வராது. பல மத்திய, மாநில அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது, அவர்கள் அமைச்சராகவும் தொடர்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


