spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிரங்கிய துபாய் விமானம் !!

மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிரங்கிய துபாய் விமானம் !!

-

- Advertisement -

மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிரங்கிய துபாய் விமானம் !!துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த ‘பிளை துபாய்’ நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

we-r-hiring

இதையடுத்து இன்று காலை 7. 45 மணியளவில் கோவையில் விமானம் தரையிறங்கியது. வானிலை சீரான தகவல் கிடைத்தபின் மீண்டும் விமானம் கோழிக்கோடு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ