Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவை தேர்தல் - டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

மக்களவை தேர்தல் – டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

-

TASMAC - டாஸ்மாக்

மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலை நடத்தவுள்ளது. கடந்த 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 01ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MUST READ