புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா். தோல்வியின் உச்சத்துக்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை எனவும் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும், அங்கிருந்த பொதுமக்களுடன் கை குலுக்கி, கலந்துரையாடி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.
மக்களின் எழுச்சியை பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதிமுக அடிமையாகிவிட்டதால் டெல்லிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. தோல்வியின் உச்சத்துக்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

என்ன செய்தாலும், பாஜக தலைவர்கள் எத்தனை பேர் படையெடுத்து வந்தாலும் திமுக வெற்றியைத் தடுக்க முடியாது. நடிகர் பின்னால் சென்று விபத்துகள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக என்ற திராவிடக் கட்சி டெல்லியிடம் அடகு வைக்கப்பட்டது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது.
வேதனையை மட்டும் தரும் பா.ஜ.க; துரோகங்களை மட்டுமே செய்யும் அ.தி.மு.க. இவர்களை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திராவிட மாடல்; பத்தாண்டுகள் தி.மு.க. தொடர்ந்து ஆட்சி செய்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்று 2031-ல் காட்டுவோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வா்…
