Homeசெய்திகள்தமிழ்நாடுபெண் காவலருக்கு பாலியல் தொல்லை- பேரவையில் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- பேரவையில் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ்

-

- Advertisement -

சட்டப்பேரவைக்கு கருப்பு நிற சட்டை அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

eps

we-r-hiring

பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசியல் வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுவது திமுக ஆட்சியில்தான், பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சரின் பதிவை ஏற்க மறுத்த அதிமுகவினர், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. பெண் காவலருக்கே பாதுகாப்பு அளிக்காத திமுக அரசு மற்ற பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தரும்? பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் 2 நாட்களுக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. தினமும் நாளிதழ்களில் வந்த கொலை, கொள்ளை செய்திகளைத்தான் அரசுக்கு பேரவையில் சுட்டிக்காட்டினோம்” எனக் கூறினார்.

MUST READ