அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் ஈபிஎஸ்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி” எனக் கூறினார்.