spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை- ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை- ஈபிஎஸ்

-

- Advertisement -

திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை- ஈபிஎஸ்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy

அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒரு பெண் முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நிரூபிஹ்ட்து காட்டியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. கல்வியறிவு பெற்ற ஒரு பெண் பல்லாயிரம் பேரை கற்றவர்களாக மாற்ற முடியும். அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழ்பவர்கள் பெண்கள்.

we-r-hiring

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தொட்டில் குழந்தை திட்டம், மகளிருக்கு நாப்கின் வழங்கும் திட்டம், மகளிருக்கு தையல் இயந்திரம் , மகளிர் கூட்டுறவு சங்கங்கள், பெண்கள் பாதுகாப்பு திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பல ஏழை பெண்கள் பயன்பெற்றனர். ஆனால் அந்த திட்டத்தை திமுக அரசு ரத்து செய்தது. அதிமுக ஆட்சி காலத்தில் மகளிருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களின் உரிமையை பறிக்கும் செயலில் விடியா திமுக அரசு ஈடுபடுகிறது” எனக் கூறினார்.

MUST READ