Homeசெய்திகள்தமிழ்நாடுமுட்டை, கறிக்கோழி விலை சரிவு...காரணம் என்ன தெரியுமா?

முட்டை, கறிக்கோழி விலை சரிவு…காரணம் என்ன தெரியுமா?

-

 

முட்டை, கறிக்கோழி விலை சரிவு...காரணம் என்ன தெரியுமா?

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 10 காசுகள் சரிந்துள்ளது. தற்போது ஒரு முட்டையின் விலை ரூபாய் 4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத் தலைவர் எப்போது வழங்குவார்?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காரணமாக சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, முட்டை, கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளதாகவும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கறிக்கோழி விலை கடந்த இரண்டு நாட்களில் 16 ரூபாய் விலைக் குறைந்து, உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி ரூபாய் 127- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வரும் நாட்களில் முட்டை, கறிக்கோழி விலை மேலும் குறையும் என்று கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ