Homeசெய்திகள்தமிழ்நாடுமொட்டை மாடியில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!

மொட்டை மாடியில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!

-

- Advertisement -

 

மொட்டை மாடியில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் ஏறி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்….. கிளம்பிய எதிர்ப்புகள்!

கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் நடராஜன் வீட்டில் சோதனையிட நேற்று (ஏப்ரல் 07) இரவு சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அதிகாரிகள் மொட்டை மாடியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது, மாடியில் ரூபாய் 500 நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளது. அவற்றை சேகரித்ததில் சுமார் 2.50 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள் பீரோவை சோதனையிட்டதில் மேலும் 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

துறு துறு நடிகர் …… மிஸ்டர் பெர்ஃபெக்ட் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் வீட்டில் இருந்த வயதான தம்பதி நடராஜன்- விமலா ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தங்களுடையது எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரூபாய் 7 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

MUST READ