Homeசெய்திகள்தமிழ்நாடு"தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

“தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

-

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி வந்துள்ளது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “தி.மு.க. வெளிப்படையான முறையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை சேகரித்துள்ளது. கட்சிக்காகப் பெற்ற நிதியைத் தணிக்கைக்கு உட்படுத்துவது தி.மு.க.வின் வழக்கம். நெருக்கடி கொடுத்து பா.ஜ.க. தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றதை விசாரிக்க வேண்டும். பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலின் ஒரு பகுதியாக இருக்கும் சி.ஏ.ஏ. சட்டம் இருக்கும்.

எதிர்காலத்தில் மாநில மொழி பேசுவோரை குறிவைத்து புதிய சட்டங்கள் வரலாம். பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகள், நிதி ஆதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்காத போதும் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிறோம். மாநில அரசுகள் இருப்பதைக் கூட பா.ஜ.க. விரும்பவில்லை.

விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்வி

எந்த திட்டத்திற்கு மாநில அரசு தடைப்போட்டது என்று கேட்டால் மத்திய அரசிடம் பதில் இல்லை. தி.மு.க.வில் வாரிசு அரசியல் என திசை திருப்பும் தந்திரங்களில் பிரதமரும், பா.ஜ.க.வினரும் ஈடுபடுகின்றனர். அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்து தி.மு.க.வின் புகழ், நன்மதிப்பைக் கெடுக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ