spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

-

- Advertisement -

மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

Image

நாமக்கல் மாவட்டம் குமரிபாளையம் அரசு மணல் கிடங்கில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றுவருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் மணல் சேமிப்புக் கிடங்கில் உள்ள அலுவலகத்தில் 2வது நாளாக சோதனை நடைபெறுகிறது. கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதா?, எவ்வளவு மணல் கிடங்கில் உள்ளது? எவ்வளவு மணல் ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மணல் கிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

we-r-hiring

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்திவரும் மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலனுடைய புதுக்கோட்டை வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது. கரிகாலன், திண்டுக்கலில் சோதனைக்குள்ளான தொழிலதிபர் ரத்தினத்தின் உறவினராவார்.

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், முருகபாலா ஆர்கிடெக்ட் மற்றும் செம்மண் குவாரி உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், அவரது வீடு, கே.எல்.கே.எஸ் நகரில் உள்ள ஆடிட்டர் முருகேசனின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை தொடர்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வந்த தகவலை தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனையால் மணல் விற்பனை நடைபெறவில்லை.

MUST READ