Homeசெய்திகள்தமிழ்நாடுஅமலாக்கத்துறை மனு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை நீதிமன்றம்!

அமலாக்கத்துறை மனு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை நீதிமன்றம்!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறை வழக்கில் சென்னை நீதிமன்றம் இன்று (ஜூன் 16) தீர்ப்பளிக்கிறது.

அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க, அமலாக்கத்துறையினர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி

அப்போது, உண்மையை வெளிக்கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று அமலாக்கத்துறைத் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, உயர்நீதிமன்ற உத்தரவைப் படித்த பிறகு, இந்த வழக்கின் மீதான உத்தரவை இன்று (ஜூன் 16) பிறப்பிப்பதாகக் கூறினார்.

MUST READ