Homeசெய்திகள்தமிழ்நாடுஅடாவடித்தனம் என்று வந்துவிட்டால் பாஜகவும், திமுகவும் ஒன்று தான் - ஈபிஎஸ்!

அடாவடித்தனம் என்று வந்துவிட்டால் பாஜகவும், திமுகவும் ஒன்று தான் – ஈபிஎஸ்!

-

"பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை"- அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

அடாவடித்தனம் என்று வந்துவிட்டால் பாஜகவும், திமுகவும் ஒன்று தான் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், கட்சியில் முழுக்க ரவுடிகளையும் தேடப்படும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவது தான் உங்கள் மாற்று அரசியலா @BJP4TamilNadu? என் மண், என் மக்கள் உங்களை கேள்வி கேட்டால் இப்படி தான் அடிதடியில் ஈடுபடுவீர்களா? அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் மட்டுமே சித்தாந்தமாக வைத்திருக்கும் நீங்கள், எங்கள் கொள்கையை கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது? மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்ல திராணியின்றி அராஜகத்தில் தான் ஈடுபடுவீர்கள் எனில், மக்களுடைய கேள்விகளை @AIADMKOffcial அனைத்து வெளிகளிலும் கேட்கும்!

"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

GST வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பது தொழில்துறையினரின் நீண்டநாள் கோரிக்கை. அதனை கேள்வியாக கேட்பதில் என்ன தவறு? அடாவடித்தனம் என்று வந்துவிட்டால் நீங்களும் திமுகவும் ஒன்று தான். நீங்க இருவருமே தமிழ்நாட்டுக்கு விரோதமான தீயசக்தி. மக்களே- வருகின்ற 19ஆம் தேதி இவர்களை ஜனநாயக முறைப்படி நாம் அனைவரும் மக்களே ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் இரட்டைஇலைக்கே_வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ