- Advertisement -
பட்டாசு ஆலையில் வெடி விபத்து- இருவர் பலி
சிவகாசி அடுத்த ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
ஆணையூர் அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 25 அறைகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர். அனைத்து விதமான பட்டாசுகளும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பணியாளர்கள் வழக்கம்போல் பணியாற்றிக்கொண்டிருந்தபோடு திடீரென பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி குமரேசன் உயிரிழந்த நிலையில், தற்போது தொழிலாளி சுந்தர்ராஜ் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் அய்யம்மாள்(7)), இருளாயி (45) ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.