பெனடிக்ட் ஆன்டோ பெயரில் ரசிகர் மன்றம்- வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்
குமரி மாவட்டத்தில் பாவ மன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பங்கு தந்தை பெனிடிக்ட் ஆன்டோ பெயரில் ரசிகர் மன்றம் உருவாக்கி திருமண வாழ்த்து பேனர் அடித்த குமரி இளைஞர்களின் செயல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்த பெனிடிக்ட் ஆன்டோ என்ற கிறிஸ்தவ பங்குதந்தை ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் அவரது புகைப்படங்களை பயன்படுத்தி பல்வேறு மீம்ஸ்களை தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பங்குதந்தை பெனிடிக்ட் ஆன்டோ பெயரில் ரசிகர் மன்றம் துவங்கி வடிவேலு சந்தானம் பட காமெடிகளை திருமண வாழ்த்து பேனரில் வைத்து வீட்டின் முன்பு வைத்துள்ளனர். இதனை திருமண வீட்டிற்கு வரும் மக்கள் வித்தியாசமான முறையில் பார்த்து செல்கின்றனர். தற்போது இது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.