Homeசெய்திகள்தமிழ்நாடுஉழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

-

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து  விவசாயிகள் உழவர் சந்தை மூலமாக வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்
பழனி உழவர் சந்தை

இந்த நிலையில் இன்று விவசாயிகள் கடை திறக்காமல் உழவர் சந்தை முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் உயர்மட்டக்குகுழு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது உழவர் சந்தை வாசலிலேயே ஏராளமானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்
பழனி காந்தி மார்க்கெட்

மேலும் உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தனர். எனவே உழவர் சந்தை வாசலில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களை அகற்ற வேண்டும். அது வரை தாங்கள் கடைகளை திறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இது குறித்து ஒன்று இரண்டு நாளில் வியாபாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிமொழியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ