Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்

-

திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் 39வது நாளாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Protest

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும், விவசாய விலைப் பொருளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி முதல் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

protest

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அச்சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டத்தின் 39-வது நாளாக இன்று இன்று டெல்டா பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும், ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வெண்டைக்காயை மாலையாக அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகள் எழுந்து செல்லமறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

MUST READ