தேசிய நேடுஞ்சாலை துறையின் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தேசிய நெடுஞ்சாலை துறை ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயரும் என சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாக கட்டணத்தில் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.75 வரை வசூலிக்கும் பட்சத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வணிகர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் .
இந்த கட்டண உயர்வை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பதுடன் காலாவதியான சுங்க சாவடிகளை அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்பபெற வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக, போரூர் சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்த இருந்தநிலையில், போலீசார் அனுமதிக்காததால் மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம்… சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்