spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாய்ச்சல் பாதிப்பால் பெண் உயிரிழப்பு!

காய்ச்சல் பாதிப்பால் பெண் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

காய்ச்சல் பாதிப்பால் பெண் உயிரிழப்பு!
Video Crop Image

காய்ச்சல் காரணமாக, ஆவடி மாநகராட்சிக்குட்பட்டப் பகுதியைச் சேர்ந்த பெண் கலையரசி (வயது 46) உயிரிழந்தார்.

we-r-hiring

பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி. இவர் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில், காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்துள்ளது. அத்துடன், நுரையீரல் தொற்றும் ஏற்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கலையரசி இன்று (அக்.22) மாலை உயிரிழந்தார்.

“இந்தியா கூட்டணி இந்தியாவை மீட்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

இதையடுத்து, ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் கலையரசி வீடு இருக்கும் பகுதிகளில் தோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், கலையரசி எந்த வகை காய்ச்சலால் உயிரிழந்தார் என்பது குறித்த தகவலை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.

MUST READ