பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலி
தருமபுரி அடுத்த நாகதாசம்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பழனியம்மாள் (70), முனியம்மாள் (50) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த சிவசக்தி என்பவர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டாசு கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் பென்னாகரம் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.