Homeசெய்திகள்தமிழ்நாடுயார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி?- இன்று அறிவிக்கிறது தமிழக அரசு!

யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி?- இன்று அறிவிக்கிறது தமிழக அரசு!

-

 

TN Govt - தமிழக அரசு

சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தலா 6,000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்பது தொடர்பாக, தமிழக அரசின் வருவாய்துறை சார்பில் இன்று (டிச.11) அரசாணை வெளியிடப்படவுள்ளது.

விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்!

சென்னையில் 16 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6,000 வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படவுள்ளது. ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைவு!

சென்னையைத் தவிர மற்ற மூன்று மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எந்தெந்த வட்டங்களுக்கு பொருந்தும் என்பது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

MUST READ