Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!

-

 

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டுச் செல்லப்பட்ட ரூபாய் 2.83 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?

கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து தனியார் ஏடிஎம்களில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல், மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தனியார் வங்கி ஏடிஎம்மில் வைப்பதற்காக வாகனத்தில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1.53 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் ஆர்எஸ் ரோடு பகுதியில் சென்ற வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதில், 4 கோடியே 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தங்கத்திற்கான உரிய ஆவணங்கள் உள்ளதா என்று வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் ஆறுமுகம் என்பவர் கொண்டு சென்ற ரூபாய் 79,600 ரொக்கம் மற்றும் உதயகுமார் என்பவர் கொண்டு சென்ற ரூபாய் 67,400 ரொக்கம் ஆகிய்வற்றைப் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி மாலை 05.00 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ