Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் - புஸ்ஸி ஆனந்த்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் – புஸ்ஸி ஆனந்த்

-

திருமணம் போன்று நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகளில் வீணடிக்கப்படும் சாப்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மூலம் தொடர்பு கொண்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு இனி அனுப்பப்படும் என கூறிய புஸ்ஸி ஆனந்த்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் - புஸ்ஸி ஆனந்த்

 

”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி விருதுகள் சிறப்பாக வழங்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் மக்களுக்கு   உணவு வழங்கப்பட்டு வருகிறது .

இனிவரும் காலங்களில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளையொட்டி ஏழை மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது .

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் - புஸ்ஸி ஆனந்த்

இதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட மண்டபங்களுடன் தொடர்பு கொண்டு மீதமாகும் உணவுகளை சேகரித்து வீணாகாமல் அருகிலுள்ள காப்பகங்களுக்கு வழங்க த.வெ.க தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிகழ்வாக உலக பட்டினி தினத்தை ஒட்டி இன்று மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

விஜய் அவர்களின் பிறந்தநாளில்  நலத்திட்டங்கள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் .

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் - புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்தான அறிவிப்பு குறித்து தா.வெ.க தலைவர் விஜய் அவர்களே முடிவெடுப்பார் ,அவர் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம் , தொடர்ந்து செயலாற்றுவோம்.

சென்றாண்டைப் போலவே நடப்பாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது , சென்ற ஆண்டு ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்டன , இந்த ஆண்டில் ஒருவர் கூட விடாமல் மாணவர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

விரைவில் விருது வழங்கும் விழா தேதி அறிவிக்கப்படும் விஜய் அவர்களே நேரடியாக மாணவச் செல்வங்களுக்கு விருது வழங்குவார் .

இதேபோல் நாம் தமிழர் கட்சி சீமான் வழிகாட்டுதல் படியே நடிகர் விஜய் கட்சி தொடங்கியதாக சீமான் கருத்து தெரிவித்தது குறித்து பதில் அளிக்க மறுத்த புஸ்ஸி ஆனந்த் .அரசியல் சார்ந்த எந்த கருத்தாக இருந்தாலும் த.வெ. க தலைவர் விஜய் தெரிவிப்பார் ” என தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக ஆவடி பட்டாபிராம் பகுதியில்  அன்னதானம் நடைபெற்றது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் - புஸ்ஸி ஆனந்த்

ஆவடி பட்டாபிராம் 20 வது வார்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இளைஞர்கள் இனைந்து சென்னை திருப்பதி நெடுஞ்சாலை இந்து கல்லூரி அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சாலை வழியாக சென்ற கல்லூரி மாணவர்கள் முதியவர்கள் அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணிகள் என அனைவருக்கும் உணவு மற்றும் வாட்டர் பாட்டில், நீர் மோர் வழங்கப்பட்டது. பசியில் வயிறார உணவு அருந்திய பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியோடு உணவு வழங்கியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் - புஸ்ஸி ஆனந்த்

விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக்கழகம் என கட்சியாக அறிவித்த பின் நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான இளைஞர்கள் ஆங்காங்கே ஆவடி அம்பத்தூர் சுற்றுவட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், கோடைகால நீர் மோர் பந்தல் அமைத்தல், உணவு வழங்குதல், போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் நடிகர் விஜயின் பெயர் திரையுலகம் மட்டுமல்லாமல் சாமானிய அடித்தட்டு மக்களின் மனதிலும் இடம்பிடித்து வாழ்த்துக்களையும் நடிகர் விஜய் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ